Saturday, January 9, 2021

தமிழ் மாநிலம்.17.12.2020

 NFPE P4:

தமிழ் மாநிலம்.17.12.2020


தோழர்களே!

கீழ்க்கண்ட பிரச்சனைகளை  தீர்ப்பதற்காக இன்று(17.12.2020) மாலை மாநில செயலாளர் தோழர் ஜி கண்ணன் மற்றும் மாநில துணைச்செயலாளர் தோழர் எஸ் வேதகிரி ஆகிய இருவரும் CPMG அவர்களை சந்தித்து பேசினோம். 


1. காலிப்பணியிடங்கள் கணக்கிடுவதில் முழுவதும் ஒரே முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் தற்போது காலிப்பணியிடங்கள் உள்ள பிரச்சனைகளை இந்தத் தேர்வுக்கு சரி செய்து தர வேண்டும் என்றும் முறையிட்டோம். 


2. தற்பொழுது நடைபெற உள்ள தபால்காரர் தேர்விற்கான காலியிடங்கள் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று முறையிட்டோம். 


3. GDS online engagement results உடனடியாக வேண்டுமென்று முறையிட்டோம். 


4.MTS தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று முறையிட்டோம்.


இந்த  4 பிரச்சனைகளுக்கும் CPMG அவர்கள் AD Recruit அவர்களை கலந்து முடிவெடுப்பதாக கூறினார்


5. 2019 ல் வெளிடப்பட்ட ஸ்போர்ட்ஸ் கோட்டா முடிவுகளை வெளியிடுமாறு கேட்டோம்.

CPMG அவர்கள் பரிசீலிப்பதாக கூறினார். 


6. அகில இந்திய அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய  சிறப்பு ஆண்டு ஊதிய உயர்வை (special increment) உடனடியாக வழங்கிட கோரி முறையிட்டோம்.


7.PSD இணைப்பு காரணமாக காலியாகும் பதவிகள் சம்மந்தமான முடிவுகள் பற்றி கேட்டோம். 

 CPMG அவர்கள் பரிசீலனை செய்து  கூறுவதாக கூறினார்.


8. சமீபத்தில் சென்னை நகரில் ஒரு தனிநபர் கூரியர் கம்பெனிக்கு direct post மூலமாக, விளம்பரம் செய்வதற்கான வியாபாரத்தை நமது இலாகாவை சேர்ந்தவர்கள் எடுத்து பணம் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இத்தகைய செயல் தபால்காரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக பதிவு செய்தோம். உடனடியாக இத்தகைய வியாபாரத்தை நிறுத்திடும்  படி கேட்டுக் கொண்டோம்.


CPMG அவர்கள் உடனடியாக தொலைபேசியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த மாதிரியான வியாபாரம் வேண்டாம் என்பதை வலியுறுத்தி யதோடு தற்போதைய பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

க. கண்ணன்

மாநில செயலாளர்.

No comments:

Post a Comment

Period of absence sue to vivid

Clarification regarding absence during COVID-19 lockdown period Dated : 13 May,2021 To, All Heads of Offices in IA&AD Director (P) Sub: ...