NFPE:P4
தமிழ் மாநிலம்,
சென்னை.600 040
--------------------------------------------------------
தோழர்களுக்கு வணக்கம்!
---------------------------------------------------
சென்னையில் 2021 பிப்ரவரி மாதம் 25.2.2021மற்றும்26.2.2021 ஆகிய இரண்டு தினங்களில் அஞ்சல் நான்கு மாநில மாநாடு நடைபெற இருக்கின்றது.
அஞ்சல் நான்கு மாநிலமாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம்(சென்னைநகர மண்டலத்துக்குட்பட்ட கோட்ட செயலாளர்கள்,மாநிலசங்க நிர்வாகிகள்) 2.1.2021மாலை அண்ணாநகரில் உள்ள மாநில சங்க அலுவலகத்தில் மாநில தலைவர் தோழர் G.சுரேஷ்பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரும் முன்னாள் மாநில பொருலாளரும்,சென்னை நகர மண்டல செயலாளருமான தோழர் வெங்கட்ரமணி அவர்களும்,மத்திய சென்னை முன்னாள் கோட்ட தலைவருமான தோழர் M.நாராயணன்,தோழர் முனுசாமி,தோழர் பாபு மாநில துணைச் செயலாளரும்,சென்னை நகர மண்டல செயலாளருமான தோழர் எஸ்.வேதகிரி,மாநில அமைப்புச் செயலாளர் தோழர் வெங்கட பாலகிருஷ்ணன்,மாநில தணிக்கையாளர் தோழர் யுவராஜ்,வடசென்னை கோட்ட செயலாளர் தோழர் K.சந்திர மோகன கிருஷ்ணன்,பொருலாளர் தோழர் D.பாஸ்கர் மத்திய சென்னை கோட்ட செயலாளர் தோழர் D.கோபி,தென்சென்னை கோட்ட செயலாளர் தோழர் G.பாரதிதாசன்,தாம்பரம் கோட்டத் தலைவர் தோழர் பாஸ்கர்,பொருலாளர் தோழர் பிரசன்ன வெங்கடேஷ், அண்ணாநகர் கிழக்கு அஞ்சலக தபால்காரர் தோழர் சிவசெல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினர்.
தோழர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்த பின்னர் மாநில செயலாளர் தோழர்G.கண்ணன் அவர்கள் ஒருங்கினைத்து சில அறிவிப்புகளை செய்தார்.
1.இரண்டு நாள் மாநாடு நட்த்துவது.
2.மாநாட்டு பணிகளில் குழு அமைப்பது
3.மாநாட்டுக்கான செலவினங்களுக்கு அந்தந்த கோட்டங்களில் உள்ள சங்க நிர்வாகிகள் நன்கொடை கட்டாயம் வசூல் செய்யவேண்டும்.
4.மாநாட்டிற்கு புதிய தபால்காரர் மற்றும் பன்முகத்திறன் ஊழியர்களை அழைத்து வந்து தொழிற்சங்க உணர்வுகளை அதிகப்படுத்த வகுப்பில் பங்கேற்க செய்யவும்.
மாநில செயலாளர் அவர்கள் மேற்கண்ட அறிவிப்புகளை செய்தார்.
மாநாட்டுக்கான அடுத்த ஆலோசனைக்கூட்டம் வருகின்ற 9.1.2021 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் நடைபெறும்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சந்தர்ப்பவசத்தால் பங்கு பெற முடியாத கோட்டங்கள் அடுத்து நடைபெறும் கூட்டத்தில் பங்குபெறுமாறு மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
G.கண்ணன்
தமிழ் மாநில செயலாளர்
No comments:
Post a Comment