Saturday, January 9, 2021

Thozhar gnanaiya special

 

🌷🌷🌷🌷 *இன்று*🌸🌸🌸 இந்திய தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின்(NFPTE ) முன்னாள் மாபொது செயலாளரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவரும் ஆன மறைந்த தோழர் டி ஞானையா அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள்.🌹🌹🌹🌹🌹🌹. (ஜனவரி 7, 1921)  அஞ்சல்துறை தந்த அரியதோர் முத்து. 🌷🌷🌷🌷 *தோழர் டி. ஞானையா 07.01.1921 ல் மதுரை திருமங்கலம் அருகிலுள்ள நடுக்கோட்டையில் பிறந்தார்* 🌸🌸🌸.1941 அக்டோபரில் அஞ்சல் எழுத்தராக கரூரில் சேர்ந்தார். .1942 முதல்1946 வரை இராணுவ அஞ்சல் சேவையில் சேர்ந்து பர்மா லிபியா சைப்ரஸ் கராச்சி ஆகிய இடங்களில் பணியாற்றினார்.
திருச்சியில் பணியாற்றிபோது தபால் தந்தி தொழிற்சங்கத்தில் தீவிரமாக் ஈடுபட ஆரம்பித்தார். உதவிக் கோட்ட செயலரில் ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்துNFPTE செயலராக 1963 லும், NEPTE மாபொதுச் செயலராக( Secretary General ) 1965 லும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .1965 முதல் 1960 வரையிலும் மற்றும்& 1976 முதல் 1978 வரையிலும்NEPTE யின் Secretary General ஆக இருந்தார்.அவர் ஒரு சிறந்த மார்க்சிய பேரறிஞர்.நாம் வாழும், வாழ்வை மேம்படுத்த நாளும் போராடும் சமூகத்திற்காக தோழர் ஞானையா அளித்த விலைமதிப்பில்லா கொடைக்காக அவரை வணங்குவோம்! 🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

Period of absence sue to vivid

Clarification regarding absence during COVID-19 lockdown period Dated : 13 May,2021 To, All Heads of Offices in IA&AD Director (P) Sub: ...