Hi all
Calculator for LTC Package:
Click link below and find out your eligibility in simple steps 👇🏻
http://mkp.org.in/ltc
Hi all
Calculator for LTC Package:
Click link below and find out your eligibility in simple steps 👇🏻
http://mkp.org.in/ltc
தோழர்களே! தோழியர்களே!! நமது திருச்சி M.K.Kottai SOவில் PA ஆக பணி புரியும் தோழர் விக்னேஷ்வரன் அவர்களின் தந்தையார்இன்று 20.01.2021 மாலை ஸ்ரீரங்கம்,அரசு மருத்துவமனையில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் . அண்ணாரது மறைவிற்கு அஞ்சலியையும், அவரது ஆன்மா சாந்தியடையவும், தந்தையை இழந்து அவரதுமறைவால் வருந்தும் தோழர் விக்னேஷ்வரன், மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் திருச்சி NFPE. அஞ்சல் மூன்று,அஞ்சல் நான்கு கோட்ட சங்கங்கள் தெரிவித்துகொள்கின்றன. தோழமையுடன் K. மருதநாயகம், S.,கோவிந்த ராஜன் D/S திருச்சி.
👆மாநில அஞ்சல் துறை அதிகாரிகள் உத்தரவை வழங்கினர்;
அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு ஆகியன தமிழிலும் நடத்தப்படும் என்று அஞ்சல் சேவை வாரியத்தின்(ஊழியர் நலன்) உறுப்பினர் சந்தோஷ் குமார் கமிலா நேற்று எனக்கு கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார்.
மேலும் இம்முடிவினை நேரடியாகவும் சென்று தெரிவிக்குமாறு தமிழ்நாடு அஞ்சல் துறை அதிகாரிகளுக்கு துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் தமிழ்நாடு சர்க்கிளின் முதன்மை மாநில தபால் துறை அலுவலர் திரு.பி.செல்வகுமார், மதுரை மாவட்ட தபால் துறை அலுவலர் ஜி. நடராஜன் ஆகியோர் இன்று எனது அலுவலகத்திற்கு வந்து என்னை சந்தித்தனர்.
அஞ்சலக தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என்கிற எனது கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சகத்திற்கு அவர்களின் வாயிலாக எனது நன்றியினை தெரிவித்துக்கொண்டேன். கடிதம் வாயிலாகவும் மத்திய அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளேன்.
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
தமிழக மாநில சங்கங்களின் அறைகூவலின் படி நாளை 12.01.2021 அன்று நடைபெறும் ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் .
அஞ்சல் நான்கின் மாநில மாநாட்டிற்கு வரவிருக்கும் தோழர்கள் உடனடியாக தங்கள் பெயர்களை பதிவிடுமாறு மீண்டும் நினைவூட்டுகிறோம் .
கடந்த 01.01.2020 முதல் நிறுத்திவைக்கப்பட்ட பஞ்ச்சபடி உயர்வினால் 2020 ஆண்டுகளில் பணிஓய்வு பெறுகின்ற ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களில் குறிப்பாக விடுப்பு மற்றும் கிராஜூடி இவைகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை கலைந்திட வேண்டி மாநிலங்களவை உறுப்பினர் திரு .பினோய் விஸ்வம் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் .
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
தமிழ்மாநில அஞ்சல் நான்கின் அறைகூவலுகிணங்க இன்று 22.12.2020 திருச்சி அஞ்சல் RMS NFPE COC சார்பாக திருச்சி தலைமை அஞ்சலகம் முன்பாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்பாட்டம் நடைபெற்றது. NFPE COC தலைவர் K.மருதநாயகம் கோட்ட செயலர் P3 தலைமைதாங்க, N.செல்வன் மாநில உதவி செயலர்AIPRPA ,R.கிரிபாலன் மாநில உதவி செயலர் P3, R.கோபாலகிருஷ்ணன் P4, P.கல்யாண சுந்தரம் GDS, R.குணசேகரன் ,சம்மேளனகுழு உறுப்பினர், ஆகியோர் வாழ்த்துரை வழங்க ,S.கோவிந்த ராஜன் ,ஆதரவு கோஷங்கள் முழங்க T.குணசேகரன் COC கன்வீனர் நன்றியுரை கூற ஆர்பாட்டம் நிறைவுற்றது. ஆர்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட தோழர்கள்,தோழியர்கள் கலந்துகொண்டனர்.🚩🚩🚩🚩🚩
1.நாகை கோட்டத்தில் தபால்காரர் வேலை நேரம் முடிந்த பின்னர் மாலை நேரத்தில் Account பிடிக்க அனைவரும் கட்டாயம் வர வற்பறுத்தப்படுகின்றனர்.
2.மயிலாடுதுறை கோட்டத்தில் வாரம் 100 account பிடிக்க சொல்லி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
3.postman phone Returns எடுக்க PMA app வேலை செய்யவில்லை என்றால் தபால்காரர் தோழர்களிடம் statment எழுதி வாங்கப்படுகிறது.
4.திருச்சி கோட்டத்தில் வாரம் 50 account பிடிக்கசொல்லி postman / gds தோழர்களை கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
5. Ssp,Sp, Asp, Ip, அனைவரும்whatsapp group வைத்து கொண்டு அதில் தினமும் ஊழியர்களை கணக்கு விவரங்களை தெரிவிக்கும் படி கட்டாயப் படுத்துகிறார்கள்.
6.வாரத்திற்க்கு ஒரு நாள் மேளா என்று சொல்லி அனைத்து கோட்டங்களிலும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை கூட்டம் நடைபெறுகிறது. இதனால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
*கண்ணீர் அஞ்சலி*
_______________________
NFPE இயக்கத்தின் அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநில உதவி செயலாளர் எல்லோராலும் அன்புடன் STR என்று அழைக்கப்படும் அம்பை *S.தியாகராஜன்* அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தினார் .
NFPE சங்கத்தின் GDS ஊழியர்களை ஒருங்கிணைத்து சங்கம் உருவாக்கியதில் மிகப் பெரும் பங்கு வகித்தவர் .அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராகவும் நிர்வாகத்தின் அத்துமீறலுக்கு எதிராக தன் ஓய்வு காலம் வரை இடைவிடாது சமரசமற்ற போராட்டங்களை ஊழியர்களை ஒன்றுதிரட்டி போராடியவர்.
எங்களது மதுரை கோட்டத்தில் பலமுறை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் தொழிற்சங்க வகுப்புகளை நடத்தி எங்களை சிறந்த தொழிற்சங்கவாதிகள் ஆக உருவாக்க மிகவும் பாடுபட்டவர் .
அம்பை யில் அவரின் பணி ஓய்வு விழாவில் மதுரை கோட்டத்தில் இருந்து 30 தோழர்கள் சென்று கலந்து கொண்டது பசுமை மாறா நினைவுகளுடன் கண்ணில் நிழலாடுகிறது.
தன்னிகரற்ற தொழிற்சங்கவாதி ji போன்றோருக்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர்* 💪💪💪💪💪 உங்கள் பாதையில் பின் தொடர்வோம்.💪💪💪 *செவ்வணக்கம் தோழர்*🚩🚩🚩
NFPE P4:
தமிழ் மாநிலம்.17.12.2020
தோழர்களே!
கீழ்க்கண்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்காக இன்று(17.12.2020) மாலை மாநில செயலாளர் தோழர் ஜி கண்ணன் மற்றும் மாநில துணைச்செயலாளர் தோழர் எஸ் வேதகிரி ஆகிய இருவரும் CPMG அவர்களை சந்தித்து பேசினோம்.
1. காலிப்பணியிடங்கள் கணக்கிடுவதில் முழுவதும் ஒரே முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் தற்போது காலிப்பணியிடங்கள் உள்ள பிரச்சனைகளை இந்தத் தேர்வுக்கு சரி செய்து தர வேண்டும் என்றும் முறையிட்டோம்.
2. தற்பொழுது நடைபெற உள்ள தபால்காரர் தேர்விற்கான காலியிடங்கள் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று முறையிட்டோம்.
3. GDS online engagement results உடனடியாக வேண்டுமென்று முறையிட்டோம்.
4.MTS தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று முறையிட்டோம்.
இந்த 4 பிரச்சனைகளுக்கும் CPMG அவர்கள் AD Recruit அவர்களை கலந்து முடிவெடுப்பதாக கூறினார்
5. 2019 ல் வெளிடப்பட்ட ஸ்போர்ட்ஸ் கோட்டா முடிவுகளை வெளியிடுமாறு கேட்டோம்.
CPMG அவர்கள் பரிசீலிப்பதாக கூறினார்.
6. அகில இந்திய அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சிறப்பு ஆண்டு ஊதிய உயர்வை (special increment) உடனடியாக வழங்கிட கோரி முறையிட்டோம்.
7.PSD இணைப்பு காரணமாக காலியாகும் பதவிகள் சம்மந்தமான முடிவுகள் பற்றி கேட்டோம்.
CPMG அவர்கள் பரிசீலனை செய்து கூறுவதாக கூறினார்.
8. சமீபத்தில் சென்னை நகரில் ஒரு தனிநபர் கூரியர் கம்பெனிக்கு direct post மூலமாக, விளம்பரம் செய்வதற்கான வியாபாரத்தை நமது இலாகாவை சேர்ந்தவர்கள் எடுத்து பணம் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இத்தகைய செயல் தபால்காரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக பதிவு செய்தோம். உடனடியாக இத்தகைய வியாபாரத்தை நிறுத்திடும் படி கேட்டுக் கொண்டோம்.
CPMG அவர்கள் உடனடியாக தொலைபேசியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த மாதிரியான வியாபாரம் வேண்டாம் என்பதை வலியுறுத்தி யதோடு தற்போதைய பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
க. கண்ணன்
மாநில செயலாளர்.
*விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் :*
*NFPE-P4 சங்கம் அறைகூவல்*
நாள் 22.12.2020 (செவ்)
மாலை 05.00 மணி
திருச்சி HPO.
புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி, டெல்லியில் கடும்குளிரில், 24 நாட்களுக்கும் மேலாக, அமைதி வழியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக . . .
அனைவரும் வருக ! ஆதரவு கரம் தாரீர்!!
தோழமையுடன்
T. குணசேகரன்
கன்வீனர் , NFPE-COC ,திருச்சி. K.மருதநாயகம் P3
S.கோவிந்தராஜன் P4 P.பன்னீர் செல்வம் GDS . கோட்டசெயலர்கள் திருச்சி.
*சமரசமில்லா போராளி*
*தோழர் M.கவனகன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி :*
*நாள்-09.01.2021-*
*இடம் திருச்சி TMO (ஜங்சன்) -நேரம் மாலை 05.30 மணி :*
*தலைமை தோழர்*
*K. இராஜ்குமார்-HRO கிளைத் தலைவர்.*
தியாகம் போற்றுவோம் ! அனைவரும் வருக !!
T. குணசேகரன்
கோட்டசெயலர்
M. பிரபாகர்
கிளைசெயலர்.
🌷🌷🌷🌷 *இன்று*🌸🌸🌸 இந்திய தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின்(NFPTE ) முன்னாள் மாபொது செயலாளரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவரும் ஆன மறைந்த தோழர் டி ஞானையா அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள்.🌹🌹🌹🌹🌹🌹. (ஜனவரி 7, 1921) அஞ்சல்துறை தந்த அரியதோர் முத்து. 🌷🌷🌷🌷 *தோழர் டி. ஞானையா 07.01.1921 ல் மதுரை திருமங்கலம் அருகிலுள்ள நடுக்கோட்டையில் பிறந்தார்* 🌸🌸🌸.1941 அக்டோபரில் அஞ்சல் எழுத்தராக கரூரில் சேர்ந்தார். .1942 முதல்1946 வரை இராணுவ அஞ்சல் சேவையில் சேர்ந்து பர்மா லிபியா சைப்ரஸ் கராச்சி ஆகிய இடங்களில் பணியாற்றினார்.
திருச்சியில் பணியாற்றிபோது தபால் தந்தி தொழிற்சங்கத்தில் தீவிரமாக் ஈடுபட ஆரம்பித்தார். உதவிக் கோட்ட செயலரில் ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்துNFPTE செயலராக 1963 லும், NEPTE மாபொதுச் செயலராக( Secretary General ) 1965 லும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .1965 முதல் 1960 வரையிலும் மற்றும்& 1976 முதல் 1978 வரையிலும்NEPTE யின் Secretary General ஆக இருந்தார்.அவர் ஒரு சிறந்த மார்க்சிய பேரறிஞர்.நாம் வாழும், வாழ்வை மேம்படுத்த நாளும் போராடும் சமூகத்திற்காக தோழர் ஞானையா அளித்த விலைமதிப்பில்லா கொடைக்காக அவரை வணங்குவோம்! 🙏🙏🙏🙏
NFPE:P4
தமிழ் மாநிலம்,
சென்னை.600 040
--------------------------------------------------------
தோழர்களுக்கு வணக்கம்!
---------------------------------------------------
சென்னையில் 2021 பிப்ரவரி மாதம் 25.2.2021மற்றும்26.2.2021 ஆகிய இரண்டு தினங்களில் அஞ்சல் நான்கு மாநில மாநாடு நடைபெற இருக்கின்றது.
அஞ்சல் நான்கு மாநிலமாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம்(சென்னைநகர மண்டலத்துக்குட்பட்ட கோட்ட செயலாளர்கள்,மாநிலசங்க நிர்வாகிகள்) 2.1.2021மாலை அண்ணாநகரில் உள்ள மாநில சங்க அலுவலகத்தில் மாநில தலைவர் தோழர் G.சுரேஷ்பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரும் முன்னாள் மாநில பொருலாளரும்,சென்னை நகர மண்டல செயலாளருமான தோழர் வெங்கட்ரமணி அவர்களும்,மத்திய சென்னை முன்னாள் கோட்ட தலைவருமான தோழர் M.நாராயணன்,தோழர் முனுசாமி,தோழர் பாபு மாநில துணைச் செயலாளரும்,சென்னை நகர மண்டல செயலாளருமான தோழர் எஸ்.வேதகிரி,மாநில அமைப்புச் செயலாளர் தோழர் வெங்கட பாலகிருஷ்ணன்,மாநில தணிக்கையாளர் தோழர் யுவராஜ்,வடசென்னை கோட்ட செயலாளர் தோழர் K.சந்திர மோகன கிருஷ்ணன்,பொருலாளர் தோழர் D.பாஸ்கர் மத்திய சென்னை கோட்ட செயலாளர் தோழர் D.கோபி,தென்சென்னை கோட்ட செயலாளர் தோழர் G.பாரதிதாசன்,தாம்பரம் கோட்டத் தலைவர் தோழர் பாஸ்கர்,பொருலாளர் தோழர் பிரசன்ன வெங்கடேஷ், அண்ணாநகர் கிழக்கு அஞ்சலக தபால்காரர் தோழர் சிவசெல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினர்.
தோழர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்த பின்னர் மாநில செயலாளர் தோழர்G.கண்ணன் அவர்கள் ஒருங்கினைத்து சில அறிவிப்புகளை செய்தார்.
1.இரண்டு நாள் மாநாடு நட்த்துவது.
2.மாநாட்டு பணிகளில் குழு அமைப்பது
3.மாநாட்டுக்கான செலவினங்களுக்கு அந்தந்த கோட்டங்களில் உள்ள சங்க நிர்வாகிகள் நன்கொடை கட்டாயம் வசூல் செய்யவேண்டும்.
4.மாநாட்டிற்கு புதிய தபால்காரர் மற்றும் பன்முகத்திறன் ஊழியர்களை அழைத்து வந்து தொழிற்சங்க உணர்வுகளை அதிகப்படுத்த வகுப்பில் பங்கேற்க செய்யவும்.
மாநில செயலாளர் அவர்கள் மேற்கண்ட அறிவிப்புகளை செய்தார்.
மாநாட்டுக்கான அடுத்த ஆலோசனைக்கூட்டம் வருகின்ற 9.1.2021 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் நடைபெறும்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சந்தர்ப்பவசத்தால் பங்கு பெற முடியாத கோட்டங்கள் அடுத்து நடைபெறும் கூட்டத்தில் பங்குபெறுமாறு மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
G.கண்ணன்
தமிழ் மாநில செயலாளர்
Clarification regarding absence during COVID-19 lockdown period Dated : 13 May,2021 To, All Heads of Offices in IA&AD Director (P) Sub: ...